
MASTER BUSINESS ANUSHKA LOVE FAILURE மாஸ்டர் படத்தின் வியாபாரம் இத்தனை கோடிகளா, காதல் தோல்வி அனுஷ்கா,
MASTER BUSINESS ANUSHKA LOVE FAILURE மாஸ்டர் படத்தின் வியாபாரம் இத்தனை கோடிகளா, காதல் தோல்வி அனுஷ்கா,
காதல் தோல்வி அனுஷ்கா,
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவா் அனுஷ்கா 38 வயது. இவரை பற்றி பல்வேறு திருமண வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுஷ்கா, ஒருவரை காதலித்து தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார்.
நான் 2008-ல் ஒருவரை காதலித்தேன். அது இனிமையான அனுபவமாக இருந்தது. அந்த காதல் எனக்கு விசேஷமானதாகவும் இருந்தது. ஆனால் அந்த காதல் தொடரவில்லை. ஒரு சூழ்நிலையால் பிரிந்து விட்டோம். நான் காதலித்தவர் யார் என்பதை வெளிப்படுத்த விரும்பவில்லை.
எனக்கு பிரபாசை 15 வருடங்களாக தெரியும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பதாலும், படத்தில் ஜோடியாக நடித்ததாலும் இணைத்து பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
மாஸ்டர் படத்தின் வியாபாரம் இத்தனை கோடிகளா,
தளபதி விஜய் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கின்றார். இவர் எந்த படம் நடித்தாலும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல்,சர்கார்,பிகில் எல்லாம் ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் சாதனை செய்தது.
இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தற்போது நடித்துள்ள படம் மாஸ்டர், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸிற்கு ரெடியாகி வருகின்றது.
தற்போது பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள், ஒரு வலை தளத்தில் பேட்டிக்கொடுத்தார். அதில் அவர் மாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 230 கோடி, இவை பிகில் படத்தை விட ரூ 30 கோடி அதிகம் என்று கூறியுள்ளார்.
அதோடு விஜய் தற்போது ரஜினியை விட வியாபாரத்தில் முன்னேறிவிட்டார் என அடித்துக்கூறியுள்ளார். மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஏதும் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிகின்றது.
please like comment and subscribe my blog. very much thanks to everybody from my bottom of heart.
சுரா 2010 இல் எஸ்.பி. ராஜ்குமார் எழுதி இயக்கிய இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். தமன்னா, வடிவேலு மற்றும் தேவ் கில் ஆகியோர் துணை வேடங்களில் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சங்கிலி முருகன் தயாரித்து, சன் பிக்சர்ஸ் விநியோகித்த இந்தப் படத்தின் ஒலிப்பதிவு மற்றும் ஸ்கோர் இசையமைத்தவர் மணி சர்மா. ஒளிப்பதிவு முறையே எம் எஸ் பிரபு மற்றும் என் கே ஏகாம்பரம் மற்றும் எடிட்டிங் டான் மேக்ஸ் கையாளப்பட்டது. இந்த படம் விஜய்யின் 50 வது படம்.
ஒரு மீனவர் குக்கிராமத்திற்கு வீடுகள் கட்ட பயன்படும் நிலங்களை காப்பாற்றுவதற்காக ஒரு கொடூரமான அமைச்சருக்கு எதிராக போராடும் ஒரு மீனவரை சுற்றி கதை சுழல்கிறது.